ADDED : ஜூன் 08, 2024 04:57 AM

பெங்களூரு : அமைச்சர் நாகேந்திரா ராஜினாமாவை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக் கொண்டார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி முறைகேடு செய்த குற்றச்சாட்டின் பேரில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா, நேற்று முன்தினம், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும்படி, கவர்னருக்கு முதல்வர் சித்தராமையா சிபாரிசு செய்தார். இந்த சிபாரிசு கடிதம், நேற்று முன்தினம் இரவு ராஜ்பவனுக்கு கிடைத்தது.
அதை பரிசீலனை செய்த கவர்னர் தாவர்சந்த் கெலாட், நள்ளிரவு 11:30 மணிக்கு, நாகேந்திராவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார். அவர் அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுவதாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர் வகித்து வந்த பழங்குடியினர் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையை, முதல்வர் சித்தராமையா, தன்னிடமே வைத்துள்ளார். ஓரிரு நாளில் வேறு அமைச்சருக்கு ஒதுக்கும் வாய்ப்பு உள்ளது.