ADDED : பிப் 22, 2025 05:31 AM

பிரயாக்ராஜில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஜீப், சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரியின் பின் பக்கம் மோதியதில், பீதர் மாவட்டத்தை ஐந்து பேர் உயிர்இழந்தனர்.
பீதர் மாவட்டம், லடகேரியை சேர்ந்த 12 பேர், கடந்த 18ம் தேதி உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவில் புனித நீராட, ஜீப்பில்சென்றனர்.
அங்கு புனித நீராடிவிட்டு, வாரணாசிக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலையில், வாரணாசியின் ரூபப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் ஜீப் மோதியது.
இதில், நீலம்மா, 62, லட்சுமி, 57, சந்தோஷ் குமார், 45, சுனிதா, 40, கலாவதி, 40, ஆகியோர் சம்பவ இடத்தில்உயிரிழந்தனர்.
குஷி, 10, கணேஷ், 14, சிவசாய், 15, சுஜாதா, 32, கவிதா, 48, சுலோச்சனா, 50, அனிதா, 50,ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள், வாரணாசியில் உள்ள அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் லாரியின் பின் பகுதியில், ஜீப்சிக்கிக் கொண்டது.
இதனால் முன்இருக்கையில்அமர்ந்து இருந்தவர்களை மீட்க அப்பகுதியினர் சிரமப்பட்டனர்.
பின் அங்குவந்த போலீசார், ஜே.சி.பி., வாகனத்தை கொண்டு வந்தனர். அதன் மூலம், லாரியில் சிக்கிய ஜீப்பை வெளியே கொண்டுவந்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அதிகாலை நேரத்தில் ஓட்டுனர் கண் அயர்ந்ததால் இந்த விபத்துநடந்ததாக தெரியவந்தது
.- நமது நிருபர் -

