ADDED : ஜூலை 04, 2024 02:03 AM
லக்னோ:லக்னோவில் மர்ம நபர் ஆசிட் வீசியதில் இளம்பெண், அவரது உறவினர் படுகாயமடைந்தனர்.
சவுக் ஸ்டேடியம் அருகே நேற்று காலை 7:45 மணியளவில் 21 வயது இளம்பெண், தன் உறவினரான சிறுவனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், இளம்பெண் மீது ஆசிட் வீசினார்.
இதில் ஆசிட் சிதறி இளம்பெண்ணும் சிறுவனும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அவசர சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கிஉள்ளனர்.
குற்றவாளிகளை கண்டு பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏ.சி.பி., குமார் தெரிவித்தார்.