கர்நாடகா கவர்னர் நடுநிலையுடன் செயல்படுங்க: துணை முதல்வர் சிவக்குமார் வலியுறுத்தல்
கர்நாடகா கவர்னர் நடுநிலையுடன் செயல்படுங்க: துணை முதல்வர் சிவக்குமார் வலியுறுத்தல்
ADDED : ஆக 31, 2024 01:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி அளித்த கவர்னரை கண்டித்து, காங்கிரசார் இன்று 'ராஜ்பவன் சலோ' முற்றுகை போராட்டம் நடத்தினர். கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பதாகைகள் ஏந்தி பேரணி நடத்தினர்.
முன்னதாக கவர்னர் உடனான ஆலோசனை கூட்டத்தை முதல்வர் சித்தராமையா புறக்கணித்து விட்டார். போராட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் சிவக்குமார், 'கவர்னர் தாவர்சந்த் கெலாட் பாரபட்சமாக செயல்படுகிறார். கவர்னர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர் செயல்பட வேண்டும்' என்றார்.