ADDED : பிப் 21, 2025 09:57 PM
ரித்தலா:“டில்லி சட்டசபையின் புதிய சபாநாயகர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிக சபாநாயகராக அரவிந்தர் சிங் லவ்லி செயல்படுவார்,” என, பா.ஜ.,வுக்கான சபாநாயகர் வேட்பாளர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.
டில்லி சட்டசபை சபாநாயகர் வேட்பாளராக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தாவை பா.ஜ., மேலிடம் அறிவித்துள்ளது. இதை நேற்று முன்தினமே விஜேந்தர் உறுதி செய்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் விஜேந்தர் குப்தா கூறியதாவது:
புதிய உற்சாகத்துடனும் புதிய ஆர்வத்துடனும் புதிய அரசு அமைந்துள்ளது. டில்லி மக்களின் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் விஷயங்கள் படிப்படியாக நகர்கின்றன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு தொடரும் என்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
அரவிந்தர் சிங் லவ்லி, சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக இருப்பார்.
முழுநேர சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சபை நடவடிக்கைகளை தற்காலிக சபாநாயகர் நடத்துவார்.
புதிய எம்.எல்.ஏ.,க்கள், அவர் முன்னிலையில் பதவியேற்றுக் கொள்வர். இதற்கான நடவடிக்கைகள் முறைப்படி துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.