sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதிய தம்பதி வீட்டை ஜப்தி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை?

/

முதிய தம்பதி வீட்டை ஜப்தி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை?

முதிய தம்பதி வீட்டை ஜப்தி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை?

முதிய தம்பதி வீட்டை ஜப்தி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை?


ADDED : ஆக 15, 2024 03:57 AM

Google News

ADDED : ஆக 15, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவனஹள்ளி : வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்பதற்காக, வயதான தம்பதியை வீட்டில் இருந்து வெளியேற்றிய தனியார் நிதி நிறுவனத்தின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியின் விஜயபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பா, 70. இவரது மனைவி ஜெயலட்சுமம்மா, 65. இவர்கள் ஆடுகள் மேய்த்து வாழ்க்கை நடத்துகின்றனர். பழைய வீட்டில் வசிக்கின்றனர்.

ஓராண்டுக்கு முன், நாகப்பாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால், தெரிந்தவர் மூலமாக, 'ஜனஸ்மால்' என்ற தனியார் நிதி நிறுவனத்தில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினர். இதில் 1.90 லட்சம் ரூபாயைத் திருப்பிச் செலுத்திவிட்டனர். மீதி தொகையை அடைப்பதற்கு தாமதம் ஆனது.

முதியவர் கட்டிய பணம், வட்டிக்கு சரியாகிவிட்டது. அசல் தொகை முழுதையும் செலுத்த வேண்டும் என, நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன் தம்பதியின் ஆடுகள், கோழிகளை வீட்டுக்குள் அடைத்து வைத்து, வீட்டை பூட்டிச் சென்றனர்.

வீட்டுக்குள் செல்ல முடியாமல், ஏணி பயன்படுத்தி கூரை வழியாக ஏறிச் சென்று, ஆடுகள், கோழிகளுக்கு தீவனம் போட்டு வந்தனர்; தண்ணீர் கொடுத்து காப்பாற்றி வந்துள்ளனர். கணவனும், மனைவியும் தங்குவதற்கு இடம் இல்லாமல் பரிதவித்தனர்.

இந்த விவகாரம், தேவனஹள்ளி தாசில்தார் பாலகிருஷ்ணா கவனத்துக்குச் சென்றது.

நேற்று மதியம், அதிகாரிகளுடன் அங்கு சென்ற தாசில்தார், பூட்டை உடைத்து வீட்டுக்குள் முதிய தம்பதியை வசிக்கும்படி கேட்டுக் கொண்டார். நிதி நிறுவன ஊழியர்களின் மனிதநேயமற்ற செயலை கண்டித்தார்.

தனிப்பட்ட முறையில் தம்பதிக்கு, 5,000 ரூபாய் கொடுத்து உதவினார். வரும் நாட்களில் அரசிடம், தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார்.

வீட்டை பூட்டிச் சென்ற ஊழியர்கள் மீண்டும் தொந்தரவு செய்தால், தன்னிடம் புகார் அளிக்கும்படி தம்பதிக்கு ஆறுதல் கூறினார்.

நிதி நிறுவனம் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்வது குறித்து தாசில்தார் ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us