ஆசிய பணக்காரர் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி!
ஆசிய பணக்காரர் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி!
UPDATED : ஜூன் 02, 2024 04:35 PM
ADDED : ஜூன் 02, 2024 04:25 PM

புதுடில்லி: முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார்.
அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் கவுதம் அதானி, 111 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான மதிப்புடன், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். முதல் இடத்தில் இருந்த, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 109 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
‛புளூம்பெர்க் பில்லியனர்ஸ்' பட்டியலில், உலகின் முதல் 10 பணக்காரர்கள் விபரம்:
1. பெர்னார்ட் அர்னால்ட்,
2. எலான் மஸ்க்,
3. ஜெப் பெசோஸ்,
4. மார்க் ஜுக்கர்பெர்க்,
5. லாரி பேஜ்,
6. பில் கேட்ஸ்,
7. செர்ஜி பிரின்,
8. ஸ்டீவ் பால்மர்,
9. வாரன் பபெட்
10. லாரி எலிசன்.
டாலர் 111 பில்லியன் நிகர மதிப்புடன் 11 வது இடத்தை அதானி பிடித்துள்ளார். 109 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 12 வது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் மோசடி, பங்குச் சூழ்ச்சிகள் மற்றும் பலவற்றின் குற்றச்சாட்டுகள் காரணமாக 2023 ஜனவரியில் அதானியின் சொத்து மதிப்பில் இருந்து 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்தது.
தற்போது அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிக்க துவங்கி உள்ளதால், பணக்காரர் பட்டியலில் அதானி முன்னோக்கி செல்ல வழி வகுக்கிறது.