பார்லி.,யில் ஒத்திவைப்பு தீர்மானம்: காங்., முடிவு?
பார்லி.,யில் ஒத்திவைப்பு தீர்மானம்: காங்., முடிவு?
UPDATED : ஜூலை 01, 2024 10:23 AM
ADDED : ஜூலை 01, 2024 10:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் இன்று (ஜூலை 1) ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
புதிய லோக்சபா துவங்கிய நாள் முதல் எம்.பி.,க்கள் பொறுப்பேற்பு மட்டுமே நடந்தது. பல்வேறு பிரச்னைகளை கிளப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று நீட் தேர்வு ரத்து தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி இண்டியா கூட்டணி கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான நோட்டீசை வழங்கி உள்ளது.
அதனை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் நீட் உள்ளிட்ட பிரச்னைகளை பார்லியில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.