மருத்துவம், பொறியியல் படிப்பு செப்., 1 முதல் மாணவர் சேர்க்கை
மருத்துவம், பொறியியல் படிப்பு செப்., 1 முதல் மாணவர் சேர்க்கை
ADDED : ஆக 22, 2024 04:08 AM
பெங்களூரு: 'நீட்' மற்றும் சி.இ.டி., ரேங்க் அடிப்படையில், மருத்துவம் மற்றும் பொறியியல் வகுப்புகளுக்கு, செப்டம்பர் 1ல், கல்லுாரிகளில் 'சீட்' ஒதுக்கப்படுகிறது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு தர வரிசை பட்டியலும்; பொறியியல் படிப்பில் சேர்வதற்கான சி.இ.டி., தேர்வு தர வரிசை பட்டியலும் ஏற்கனவே வெளியானது.
மாணவர்கள், தங்களுக்கு பிடித்தமான கல்லுாரி மற்றும் படிப்பை, இன்று காலை 10:00 மணி வரை, ஆன்லைனில் தேர்வு செய்து கொள்ள கர்நாடக தேர்வு ஆணையம் அவகாசம் அளித்துள்ளது.
இரண்டாவது முறையாக, வரும் 25ம் தேதி இரவு 8:00 மணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 27ம் தேதி காலை 11:00 மணி வரை, கல்லுாரி அல்லது படிப்புகளை மாற்றிக் கொள்ள அவகாசம் தரப்பட்டுள்ளது.
இறுதியாக செப்டம்பர் 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு, மாணவர்களுக்கு கல்லுாரிகளில் சீட் ஒதுக்கப்பட உள்ளது என, கர்நாடக தேர்வு ஆணைய செயல் நிர்வாக இயக்குனர் பிரசன்னா தெரிவித்தார்.
ஆன்லைனில் பதிவு செய்யும்போது, கல்லுாரி, படிப்பு, சுய விபரங்களை சரியாக குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட படிப்புகளுக்கான கல்வி கட்டணம் விபரமும் பதிவு செய்யும்போதே ஆன்லைனில் தகவல் கிடைக்கும். இதை மாணவர்களும், பெற்றோரும் கவனமாக பார்க்க வேண்டும்.