ADDED : ஜூலை 04, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு நேற்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 26ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அத்வானி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகவியல் மருத்துவத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நலம் தேறிய அவர், இரு நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்.
இந்நிலையில், அத்வானிக்கு நேற்றிரவு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டில்லி அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.