ADDED : ஜூலை 01, 2024 09:15 PM

ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் குமாரசாமி. லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்று, தேசிய அரசியலுக்கு சென்றுள்ளார். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் காலியான சென்னப்பட்டணா தொகுதிக்கு அறிவிக்கப்படும் இடைத்தேர்தலில், நிகில் குமாரசாமி போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்பட்டது.
பா.ஜ., தலைவர் யோகேஸ்வரும், சீட் எதிர்பார்க்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக டில்லியில் நேற்று முன்தினம் இரவு, குமாரசாமியை பா.ஜ.,வின் யோகேஸ்வர் சந்தித்து பேசினார்.
அப்போது யோகேஸ்வர், 'நீங்கள் ஒப்புதல் அளித்தால், சென்னப்பட்டணா இடைத்தேர்தலில், நான் போட்டியிடுகிறேன். அல்லது நிகிலை களமிறக்கினாலும், எனக்கு ஆட்சேபனை இல்லை. அவரை முழுதுமாக ஆதரிப்பேன். நீங்களே முன் நின்று, இடைத்தேர்தலை நடத்த வேண்டும். நீங்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள், வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் தேர்தலுக்கு தயாராக, வசதியாக இருக்கும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குமாரசாமியும் முடிவு செய்வதாக கூறியுள்ளார்.
- நமது நிருபர் -