'பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. பயனாளிகள் வழங்கும் தொகையில் 1 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. அரசு 5 லட்சம் ரூபாய் பணம் செலுத்துகிறது. கர்நாடக குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 1,80,253 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 86,651 வீடுகளின் பணிகள் முடிந்து உள்ளன. மீதம் உள்ள வீடுகளின் பணியும் விரைவில் முடிக்கப்படும்.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல் அருகே சூர்யா நகரில், கர்நாடக வீட்டுவசதி வாரியம் 16,140 மனைகளை மேம்படுத்தும். இந்த திட்டத்திற்கு நிலம் கொடுத்த உரிமையாளர்களுக்கு 50க்கு 50 சதவீதத்தின் கீழ் நிலம், பணம் வழங்கப்படும். மீதம் உள்ள நிலம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்படும்.
ராஜிவ் காந்தி வீட்டு வசதி கழகம் சார்பில், வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் நோக்கில் 'முதல்வரின் பல மாடி வீடுகள்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீடுகளை வாங்க ஏற்கனவே 12,153 பயனாளிகள் தலா ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர். இந்த திட்டத்திற்காக மாநில அரசு 121 கோடி ரூபாய் செலவு செய்கிறது.