sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

8ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஐஹொளே துர்கா கோவில்

/

8ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஐஹொளே துர்கா கோவில்

8ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஐஹொளே துர்கா கோவில்

8ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஐஹொளே துர்கா கோவில்


ADDED : மே 23, 2024 10:18 PM

Google News

ADDED : மே 23, 2024 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரில் இருந்து, 450 கி.மீ., துாரத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டம், ஐஹொளேவில் துர்கா கோவில் அமைந்துள்ளது. 8ம் நுாற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட இக்கோயில் முதலில் சூரியனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த கோவில் சைவ, வைணவ, சாக்த, வைதீக சமயங்களின் தெய்வங்களின் உருவங்களை சித்தரிக்கும் அலங்காரமான சிற்பங்களை கொண்டுள்ளது. நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், அதன் அரைவட்ட கட்டட அமைப்பாலும் ஈர்க்கப்படுகிறது.

இது, ஆரம்பகால சாளுக்கிய கோவில் கட்டடக் கலைக்கு ஒரு அரிய எடுத்துக்காட்டாக உள்ளது. 13ம் நுாற்றாண்டிற்கு பின், ஹிந்து அரசர்களுக்கும், முஸ்லிம் சுல்தான்களுக்கும் இடையிலான போரின் போது, கோவிலின் மேல் ஒரு கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டதால், துர்கம் என்று அழைக்கபட்டது. கால போக்கில், துர்கா கோவில் என்று மருவியது.

இடிபாடுகளாக இருந்த கோவில், 19ம் நுாற்றாண்டில் சீரமைக்கபட்டது

ஆனால், கண்காணிப்பு கோபுரம் இப்போது இல்லை.

ஐஹொளேவில் உள்ள துர்கா கோவில் சுற்றுலாப் பயணியரையும், அறிஞர்களையும் ஈர்க்கும் முக்கிய புராதன நினைவு சின்னமாக விளங்குகிறது.

தொல்லியல், பழங்கால கோவில்கள் மற்றும் வரலாற்றை விரும்புவோருக்கு ஐஹொளே மகிழ்ச்சியை தரும் தலமாகும்

அரைவட்ட வடிவில் அமைந்த கோவில், உயரமான பீடம் மற்றும் கருவறையை சுற்றியிருக்கும் காட்சிக்கூடம் பக்தர்களை ஆச்சரியமூட்டும்.

இங்கிருந்து, பட்டதகல், பாதாமி ஆகிய புகழ்பெற்ற புராதன நகரங்கள் அமைந்துள்ளன.

துர்கா கோவில் வளாகத்தில் தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் உள்ளது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பு பூஜைகள் நடப்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

ஐஹொளேவில், கருடகோவில், சக்ரகோவில், அம்பிகாரகோவில், ரச்சிகுடி, குந்திகுடி, ஹள்ளிபசப்பா கோவில், படிகர்கோவில், திரிம்பகேஸ்வர் கோவில், மல்லிகார்ஜுன கோவில், ஜோதிர்லிங்கா கோவில் என ஏராளமான புராதன கோவில்களையும் காணலாம்.

துர்கா கோவில், மிகுந்த கலைநயம் மிக்க கட்டடமாக இருப்பதால், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்கும்படி, பல ஆண்டுகளாக அப்பகுதியினர் கோரி வருகின்றனர்.

இதற்காக, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்

. நமது நிருபர் -






      Dinamalar
      Follow us