எல்லையில் அமைதி மியான்மர் பிரதமரிடம் அஜித் தோவல் வலியுறுத்தல்
எல்லையில் அமைதி மியான்மர் பிரதமரிடம் அஜித் தோவல் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 27, 2024 11:40 PM

நேபிடாவ்: எல்லை பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், மியான்மர் பிரதமர் ஆயுங் ஹாலெய்னை, நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சந்தித்து பேசினார்.
நம் அண்டை நாடான மியான்மரில், பிம்ஸ்டெக் எனப்படும் வங்காள விரிகுடாவில் பன்னோக்கு தொழில்நுட்ப மற்றும் பொருளாதா ஒத்துழைப்பின், நான்காம் ஆண்டு கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில், வங்காள விரிகுடா பகுதியில் உள்ள நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர். நம் நாட்டின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தின் ஒரு பகுதி யாக, மியான்மர் பிரதமர் ஜெனரல் மின் ஆயுங் ஹாலெய்னை, அஜித் தோவல் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, இரு நாட்டின் உறவுகளை வலுப்படுத்துவதுடன், ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசினர்.
இதுதவிர, மியான்மரில் நிலவும் அரசியல் சூழல் பற்றியும், அங்கு விரைவில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்தவும் அஜித் தோவல் வலியுறுத்தினார்.
இதேபோல் எல்லை பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதை உறுதி செய்யும்படியும், மியான்மர் பிரதமரிடம் அஜித் தோவல் வலியுறுத்தினார்.