ADDED : ஜூன் 10, 2024 04:47 AM
டில்லியில் நடந்த விழாவில் குமாரசாமி பதவி ஏற்க வந்த போது, குமரண்ணாவுக்கு ஜே...குமரண்ணாவுக்கு ஜே... என்று, அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்த குமாரசாமி, தனது பெயரை 'ஹரதனஹள்ளி தேவகவுடா குமாரசாமி' என குறிப்பிட்டு கடவுள் பெயரில் ஆங்கிலத்தில் பதவி ஏற்றார். நிகழ்ச்சி மேடையில் முதல்வர் வரிசையில் குமாரசாமி அமர்ந்திருந்தது, பிரதமர் அவருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.
தார்வாட் எம்.பி., பிரஹலாத் வெங்கடேஷ் ஜோஷி, கடவுள் பெயரில், ஆங்கிலத்தில் பதவி ஏற்று கொண்டார்.
மத்திய இணை அமைச்சர்களாக பதவி ஏற்ற கர்நாடகாவின் சோமண்ணா கடவுள் பெயரில், ஆங்கிலத்திலும், ஷோபா கடவுள் பெயரில், ஹிந்தியிலும் பதவி ஏற்றனர்.
பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவை ஒட்டி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி, பா.ஜ., - ம.ஜ.த., எம்.பி., க்கள் பங்கேற்றனர்.
கர்நாடக பா.ஜ., தலைவர்கள் பலர் டில்லியில் முகாமிட்டனர். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.
தாவணகெரே சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த, எடியூரப்பா மீது முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா அதிருப்தியில் இருந்தார். ஆனால் நேற்று டில்லியில் எடியூரப்பாவை சந்தித்து, சகஜமாகபேசினார்.

