கவிழ்த்தவர்களுடன் கூட்டணியா? குமாரசாமிக்கு அமைச்சர் கேள்வி!
கவிழ்த்தவர்களுடன் கூட்டணியா? குமாரசாமிக்கு அமைச்சர் கேள்வி!
ADDED : ஆக 04, 2024 11:08 PM

பெங்களூரு: கர்நாடகா தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகா காங்கிரஸ் அரசு நிலைக்காது என்று மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகிறார். மாநிலத்தில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசை கவிழ்த்த பா.ஜ.,வுடன் தான் கூட்டணி வைத்துள்ளார் என்பதை மறந்துவிடக்கூடாது. இவர் சந்தர்ப்பவாதி.
புதுடில்லியில் பா.ஜ., தலைவர்களை சந்தித்து, பிரீதம் கவுடா பாதயாத்திரையில் பங்கேற்க கூடாது என்று அக்கட்சி தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்தார். அவர்களும் வாக்குறுதி அளித்த பின்னரே, இந்த பாதயாத்திரையில் குமாரசாமி பங்கேற்றார்.
காங்கிரஸ் மேலிட தலைவர்கள் வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் பெங்களூரு வந்துள்ளனர்.
தற்போது எழுந்துள்ள ஊழல், முறைகேடு என பல சிக்கல்களை சந்தித்து வரும் அரசை, எப்படி நிர்வகித்து கொண்டு செல்வது என்பது குறித்து விவாதிக்கப்படும். கட்சியின் நலனுக்காக இந்த கூட்டம் நடக்கலாம். தவறு செய்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.