7 மாநிலங்கள், 14 மாவட்டங்கள், 8 ரயில் திட்டங்களுக்கு ரூ.24,657 கோடி ஒதுக்கீடு
7 மாநிலங்கள், 14 மாவட்டங்கள், 8 ரயில் திட்டங்களுக்கு ரூ.24,657 கோடி ஒதுக்கீடு
ADDED : ஆக 10, 2024 07:39 PM

புதுடில்லி: நாடு முழுவதும் 7 மாநிலங்கள் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய 8 புதிய ரயில் திட்டங்களுக்கு மத்தியஅரசு ரூ.24,657 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் கூறி உள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிஇருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலானா பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ரூ.24,657 கோடி மதிப்பீட்டில் எட்டு ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 14 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் எட்டு திட்டங்கள் மூலம் 900 கி.மீ.,க்கு ரயில் சேவை விரிவு படுத்தப்படும்.
மேலும் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான அஜந்தா குகைகள் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் என்றார்.

