'அம்பரிஷ் உயிருடன் இருந்திருந்தால் தர்ஷனை கன்னத்தில் அறைந்திருப்பார்'
'அம்பரிஷ் உயிருடன் இருந்திருந்தால் தர்ஷனை கன்னத்தில் அறைந்திருப்பார்'
ADDED : ஜூன் 24, 2024 04:48 AM

பெங்களூரு, : ''நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரிஷ் உயிருடன் இருந்திருந்தால், தர்ஷன் செய்த தவறுக்காக அவரை கன்னத்தில் அறைந்திருப்பார்,'' என்று, திரைப்பட இயக்குனர் ஓம் பிரகாஷ் ராவ் கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சிறிய விஷயத்துக்காக நடிகர் தர்ஷன் கொலை செய்துள்ளார். ரேணுகாசாமியை அழைத்து, இனிமேல் இது மாதிரி செய்யக்கூடாது என்று அறிவுரை கூறியிருக்கலாம்.
இந்த வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். போலீசார் நடத்திய விசாரணை பாராட்டுக்கு உரியது.
தர்ஷன் திறமையான நடிகர்; நல்ல மனிதரும் கூட. கன்னடர்களுக்கு திரைத்துறையில் நிறைய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர். சில தனிப்பட்ட காரணங்களால் அவரை, கடந்த 10 ஆண்டுகளாக சந்திக்கவில்லை. தர்ஷனை வைத்து ஒரு படம் எடுக்க நினைத்தேன். ஆனால் முடியாமல் போய்விட்டது.
நடிகர் அம்பரிஷ், கன்னட திரை உலகின் பெரிய அண்ணனாக இருந்தார். யார் தவறு செய்தாலும் கண்டித்தார். இப்போது அவர் உயிருடன் இருந்திருந்தால், தர்ஷன் கன்னத்தில் அறைந்து, 'தவறு செய்கிறாய்' என்று கூறியிருப்பார்.
இவ்வாறு அவர்கூறினார்.