sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அனந்தபத்மநாபாவுக்கு பிடித்த வாழைப்பழம் காணிக்கை

/

அனந்தபத்மநாபாவுக்கு பிடித்த வாழைப்பழம் காணிக்கை

அனந்தபத்மநாபாவுக்கு பிடித்த வாழைப்பழம் காணிக்கை

அனந்தபத்மநாபாவுக்கு பிடித்த வாழைப்பழம் காணிக்கை


ADDED : ஜூலை 01, 2024 09:19 PM

Google News

ADDED : ஜூலை 01, 2024 09:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி மாவட்டம், பெர்துாரில் 800 ஆண்டுகால பழமையான அனந்த பத்மநாபா கோவில் அமைந்துள்ளது.

புராணங்கள்படி, முன்னொரு காலத்தில் கிருஷ்ண வர்மா என்ற பிராமணர், தினமும் அனந்தேஸ்வர தேவியை தரிசனம் செய்ய செல்வார். ஒரு நாள் அவரது கனவில், கடவுள் தோன்றி உபதேசம் செய்தார்.

உறக்கத்தில் இருந்து எழுந்த அவர், தனது குருவான க்ருத்ரதனாடே சுவாமியிடம் விபரத்தை கூறினார். சீடனின் பேச்சை கேட்ட குரு, சிலை வடிவமைக்க பாறையை தேடி கண்டுபிடித்தார்.

தனது சீடர்களிடம் கூறி, கற்களை சுமந்து கொண்டு நடந்து சென்றனர். சீடர்கள் அனைவரும் பசியுடன் இருப்பதை உணர்ந்தார். அந்நேரத்தில் வாழைப்பழம் வியாபாரி ஒருவர், வாழைப்பழத்துடன் அவ்வழியாக வந்தார். அவரை நிறுத்திய சுவாமிகள், பழம் கேட்டார். அதற்கு அந்த வியாபாரி, பழங்களை சந்தைக்கு கொண்டு செல்வதாக கூறினார்.

இவ்வாறு கூறிய சில நொடிகளில், திடீரென அவரது பழக்கூடை பாரமானது. பாரத்தை தாங்க முடியாமல், வியாபாரி கீழே விழுந்தார். தனது தவறை உணர்ந்த வியாபாரி, சுவாமிகள் கூறியபடி, சீடர்களுக்கு பழத்தை வழங்கினார்.

இங்கு லட்சுமி ஜனார்த்தன விக்ரஹம் இருந்தாலும், சிலையின் கீழ், நாகப்பாம்பு இருப்பதால், அனந்த பத்மநாபா என்றே அழைக்கின்றனர்.

இக்கோவிலில் ஆண்டு விழா, ராமநவமி, நாக பஞ்சமி, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, விஜயதசாமி என விழாக்கள் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் தேர் திருவிழாவின் போது, சுருளே வம்சத்து மன்னர்கள், ஏழு நாட்கள் கோவிலில் தங்கி, தரிசனம் செய்வர். கோவிலின் வடக்கு பகுதியில் பத்மா தெப்பகுளம் உள்ளது.

சுவாமிக்கு அனைத்து சேவைகளையும் விட, வாழைப்பழம் சமர்ப்பிப்பது மிகவும் முக்கியம். புதுமண தம்பதியர் இங்கு வந்து தரிசித்தால், வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்றும் நம்பப்படுகிறது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us