அனந்தபூர் சாஹிப் தொகுதி பி.எஸ்.பி., வேட்பாளர் அறிவிப்பு
அனந்தபூர் சாஹிப் தொகுதி பி.எஸ்.பி., வேட்பாளர் அறிவிப்பு
ADDED : மே 04, 2024 09:01 PM
சண்டிகர்:பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் ஜஸ்விர் சிங் கர்ஹி, அனந்தபூர் சாஹிப் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மாநில பொறுப்பாளர் ரந்தீர் சிங் பெனிவால் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பஞ்சாப் மாநிலம் அனந்த்பூர் சாஹிப் லோக்சபா தொகுதியில், பஞ்சாப் மாநில பி.எஸ்.பி., தலைவர் ஜஸ்விர் சிங் கர்ஹி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாபின் 12 தொகுதி களுக்கும் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவித்த நிலையில், மீதியிருந்த ஒரு தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனந்தபூர் சாஹிப் தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி இம்முறை சண்டிகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அனந்தபூர் சாஹிப்பில் இந்த முறை ஆம் ஆத்மி சார்பில் மல்விந்தர் கங், காங்கிரஸ் சார்பில் விஜய் இந்தர் சிங்லா மற்றும் சிரோமணி அகாலி தளம் வேட்பாளராக பிரேம் சிங் சந்து மஜ்ரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளுக்கும் ஜூன் 1ம் தேதி தேர்தல் நடக்கிறது.