ADDED : செப் 06, 2024 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயவாடா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த வாரம் கனமழை கொட்டியது. ஆந்திராவின் விஜயவாடா நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. ஆயிரக்கணக்கான வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. விளைநிலங்களிலும் வெள்ளம் புகுந்தது.
இந்நிலையில், விஜயவாடாவில் மழை பாதித்த பகுதிகளை சஞ்சீவ் குமார் ஜிண்டால் தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
மாநிலத்தில் பெய்த மழை, விஜயவாடாவில் ஏற்பட்ட பாதிப்பு நிலை குறித்து மத்திய குழுவிடம் அதிகாரிகள் விளக்கினர்.
ஆந்திராவில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரண நிதியாக, முதல் தவணையாக, 5,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.