sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மற்றொரு திருமலை ராபர்ட்சன்பேட்டை பெருமாள் கோவில்

/

மற்றொரு திருமலை ராபர்ட்சன்பேட்டை பெருமாள் கோவில்

மற்றொரு திருமலை ராபர்ட்சன்பேட்டை பெருமாள் கோவில்

மற்றொரு திருமலை ராபர்ட்சன்பேட்டை பெருமாள் கோவில்


ADDED : செப் 01, 2024 11:50 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெய்வபக்தி மிக்க நகரங்களில் தங்கவயலும் ஒன்று. இங்குள்ள வெங்கடேச பெருமாள் சுவாமி பக்தர்களுக்கு இன்னொரு திருமலையாக மாறியுள்ளது. இந்த புண்ணிய தலம், ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

சொர்ணகுப்பம் பகுதியில் தங்கச் சுரங்க ஒப்பந்ததாரர் பாஷ்யகாரலு நாயுடுவின் கனவில் திருமலை தெய்வம் திருவேங்கடமுடையான் தோன்றி, தனக்கு ஒரு கோவில் கட்டுமாறு கூறியுள்ளார். இதை வேத வாக்காக கருதி, தனக்கு சொந்தமான இடத்தில் சிறிய கோவிலை கட்டினார்.

நின்ற திருக்கோலம்


சென்னையில் இருந்து 1951 சுவாமி விக்ரஹங்களை வரவழைத்தார். கருப்பு கற்களில் உள்ள விக்ரஹம், நின்ற திருக்கோலத்தில் வரம் வழங்கும் வள்ளல் பெருமானாக காட்சி அளிக்கிறார். இடமும், வலமுமாக ஸ்ரீ தேவி பூதேவி விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இக்கோவிலை மைசூரு மகாராஜா, 1936 டிசம்பர் 10 ம் தேதி அரசுக்கு முறையாக எழுதி கொடுத்தார். கட்டட நிலம், தங்க ஆபரணங்கள், வைப்பு தொகையுடன் ஒப்படைக்கப்பட்டது.பழமை வாய்ந்த இக்கோவில், ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் அமைந்துள்ளது. இக்கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரையிலும்; மாலையில் 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவிலில் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடும் கொடி மரம், விநாயகர் சன்னிதி, நவக்கிரஹ சன்னிதி, நாக தேவதைகள், கிருஷ்ணர் சன்னிதி, சந்தனம், நெல்லி, ஆலமரம், வேப்பமரம் ஆகியவைகளும் உள்ளன. கோவில் வளாகத்தில் தெப்பக்குளம் உள்ளது.

பிரம்மோற்சவம்


தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் அதனை போக்கும் வளம் தரும் பெருமானாக, வரம் அளிக்கும் புண்ணிய தலமாக உள்ளது. இக்கோவிலில், 13 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது.

ஷிபிக வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், கல்யாண உற்சவம், கருட வாகன உற்சவம், கஜேந்திர மோக் ஷம், ரத உற்சவம், பார்வடோற்சவம், அம்ச வாகனம், புஷ்ப பல்லக்கு, முத்து பல்லக்கு, தங்கத்தேர் பிரசித்தி பெற்றவை.

தங்கவயல் பக்தர்களை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டத்தினர் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தவர்களையும் பக்தியால் கட்டிப் போடுகிறது. இங்கு வரம் தரும் பெருமாளை வேண்டுவோருக்கு வளம் பெருகுவதாக பலரும் நம்பிக்கை கொண்டு உள்ளனர். இக்கோவிலில் சனிக்கிழமைகளில் எழும், 'கோவிந்தா' கோஷம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us