எம்.பி.பாட்டீல் மன்னிப்பு கேட்கணும்: பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆவேசம்
எம்.பி.பாட்டீல் மன்னிப்பு கேட்கணும்: பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆவேசம்
ADDED : ஆக 30, 2024 09:55 PM

பெங்களூரு,: 'கே.ஐ.ஏ.டி.பி., எனும் கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையம் மூலம், நிலம் பெற்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, 'கொட்டகை வாடிக்கையாளர்' என, மாநில கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பெங்களூரில், நேற்று மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டி:
மேலவை எதிர்க்கட்சித் தலைவர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தசலவாதி நாராயணசாமியை, அவரின் பதவிக்கு மதிப்பு கொடுக்காமல், இழிவான மற்றும் புண்படுத்தும் வகையில், தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் விமர்சித்துள்ளார்.
இதன் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், உயர் பதவி வகிப்பதால் பொறாமை கொண்டுள்ளார்.
சமூக ஆர்வலர் ஒருவரை, மேலவை எதிர்க்கட்சித் தலைவராக பா.ஜ., நியமித்தது. கே.ஐ.ஏ.டி.பி.,யில் சட்டவிரோதமாக மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்திற்கு மனைகள் ஒதுக்கப்பட்டதாகசலவாதி நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
இதை ஆரோக்கியமான மனதுடன் ஏற்றுக் கொண்டு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர்,அடிமட்டத்தில் இருந்து இன்று உயர்ந்துள்ளபட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவரை இழிவு படுத்தியது சரியல்ல.
இது அவரை மட்டுமல்ல, அவரது சமுதாயத்தை இழிவுபடுத்தும் செயலாகும். எனவே அமைச்சர் எம்.பி. பாட்டீல், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.