மைசூரில் மேம்பாட்டு பணிகள் மத்திய அமைச்சரிடம் முறையீடு
மைசூரில் மேம்பாட்டு பணிகள் மத்திய அமைச்சரிடம் முறையீடு
ADDED : ஜூலை 25, 2024 10:53 PM

மைசூரில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் வலியுறுத்தினார்.
புதுடில்லியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை, பா.ஜ., - எம்.பி., யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜா உடையார் சந்தித்து பேசினார்.
மைசூரு வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு திட்டங்களை அமல்படுத்துவது குறித்தும்; பெங்களூரு - மைசூரு விரைவு சாலையில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கவும்; மைசூரு - குஷால் நகரில் நிலம் கையகப்படுத்த அனுமதி பெறவும்; கேரளா - கொள்ளேகால் இடையே ஆறு வழிச்சாலையை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரினார்.
மேலும், 'மைசூரு வட்டச்சாலை மற்றும் பெங்களூரு - மைசூரு விரைவு சாலையை இணைக்கும் வகையில், மணிப்பால் மருத்துவமனை ஜங்ஷனில் இருந்து மேம்பாலம் கட்ட வேண்டும். பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த, சுங்கச்சாவடிகளை நிறுவி, மேம்படுத்த வேண்டும்.
'உள்ளூர் போக்குவரத்தை எளிதாக்குவதற்கு ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டிக்கு செல்லும் நெடுஞ்சாலையை, ஆறு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் சந்தித்து பேசினார். இடம்: புதுடில்லி
- நமது நிருபர் -.

