ADDED : ஏப் 29, 2024 06:44 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலின், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் வட மாவட்டங்களுக்கு, அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என, கர்நாடக காங்கிரஸ் தலைமை கட்டளையிட்டுஉள்ளது.
கர்நாடகாவின் வட மாவட்டங்களின் 14 லோக்சபா தொகுதிகளுக்கு, மே 7ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதை தீவிரமாக கருதியுள்ள காங்கிரஸ், 13 அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது.
தாவணகெரேவுக்கு பரமேஸ்வர், தார்வாடுக்கு தினேஷ் குண்டுராவ், உத்தரகன்னடாவுக்கு ஜார்ஜ்,, சிக்கோடிக்கு சுதாகர், ஹாவேரிக்கு கிருஷ்ண பைரேகவுடா, பல்லாரிக்கு ராமலிங்கரெட்டி, பெலகாவிக்கு சுதாகர்.
கொப்பாலுக்கு பைரதி சுரேஷ், ராய்ச்சூருக்கு முனியப்பா, பீதருக்கு வெங்கடேஷ், ஷிவமொகாவுக்கு செலுவராயசாமி, விஜயபுராவுக்கு மஹாதேவப்பா, பாகல்கோட்டுக்கு ராஜண்ணா பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கலபுரகிக்கு பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை.
அனைத்து தொகுதிகளிலும், கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என, மாநில காங்., தலைவர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

