பா.ஜ.,வுக்கு தர்மசங்கடம் அரவிந்த் லிம்பாவளி வருத்தம்
பா.ஜ.,வுக்கு தர்மசங்கடம் அரவிந்த் லிம்பாவளி வருத்தம்
ADDED : மே 03, 2024 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயபுரா: ''ம.ஜ.த.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வழக்கால், பா.ஜ.,வுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது,'' என அக்கட்சியின் மூத்த தலைவர் அரவிந்த் லிம்பாவளி தெரிவித்தார்,
விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:
ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வழக்கால், பா.ஜ.,வுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது உண்மை தான். இதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் தவறு செய்தவரை பா.ஜ., ஆதரிக்காது; அவருடன் நிற்காது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகிறோம்.
விசாரணையில் கட்சி குறுக்கிடாது. பிரஜ்வல் ரேவண்ணா விஷயத்தை அரசியல் நோக்கத்துக்கு, காங்கிரஸ் பயன்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.