சுரேஷ் தோற்பது போன்று கனவு சிவகுமாருக்கு அசோக் கேள்வி
சுரேஷ் தோற்பது போன்று கனவு சிவகுமாருக்கு அசோக் கேள்வி
ADDED : ஏப் 29, 2024 05:50 AM

பெங்களூரு, : ''தன் தம்பி சுரேஷ் லோக்சபா தேர்தல் தோற்பது போன்று துணை முதல்வர் சிவகுமாருக்கு கனவு வந்ததாம்,'' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிண்டல் அடித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
தன் தம்பி சுரேஷ், லோக்சபா தேர்தலில் தோற்ற பின், அவரை எம்.எல்.சி.,யாக தேர்வு செய்து, அமைச்சரவையில் சேர்ப்பது போன்று, துணை முதல்வர் சிவகுமார் கனவு கண்டாராம்.
தோல்வி பயம் அவரை வாட்டுகிறது. ஏனென்றால் பெங்களூரு ரூரல் தொகுதியில், சுரேஷ் தோற்கடிக்கப்படுவார். நாங்கள் வெற்றி பெறுவோம்.
பெங்களூரு ரூரல் தொகுதியில், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால், தமிழகத்துக்கு சென்று சிவகுமார், ஏன் ஹோமம் நடத்த வேண்டும். லோக்சபா தேர்தல் முடிந்த பின், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை, கீழே இறக்குவர் என, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சரியாக கூறியுள்ளார்.
சித்தராமையா திறந்த புத்தகம் போன்றவர். மிகவும் தெளிவானவர். எதிரிகளை எப்படி ஒடுக்குவது என்பது, இவருக்கு தெரியும். இதற்கு உதாரணம் பரமேஸ்வர்.
மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவரையே, சித்தராமையா தோற்கடித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.

