ADDED : ஆக 07, 2024 02:26 AM
சிவில் லைன்ஸ்: வடக்கு டில்லியில் காவல் நிலையத்திற்குள் ஏ.எஸ்.ஐ., தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்குள் காவல் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விஜய், தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
நேற்று முன் தினம் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரிடமிருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர். 1994-ம் ஆண்டு டில்லி காவல் படையில் சேர்ந்தார். சம்பவ இடத்தில் குற்றவியல் மற்றும் தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தனர். குடும்பப் பிரச்னை காரணமாக இந்த முடிவுக்கு அவர் வந்ததாக கூறப்படுகிறது.
எனினும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.