ADDED : ஜூலை 02, 2024 06:36 AM

பெங்களூரு: கர்நாடகாவில் கடைசியாக, பிப்ரவரி 12ம் தேதி முதல், 29ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. ஆண்டின் முதல்வர் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாளில், கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார்.
இந்நிலையில், மழைகால கூட்டத்தொடரை எப்போது நடத்தலாம் என்பது குறித்து, கடந்த 20ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, கூட்டத்தொடர் நடத்தும் நாட்களை இறுதி செய்யும் அதிகாரம் முதல்வர் சித்தராமையாவுக்கு அளிக்கப்பட்டது.
இது குறித்து, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
அமைச்சரவை அளித்த அதிகாரத்தின்படி, மழைகால கூட்டத்தொடர் நடத்தும் நாட்களை, முதல்வர் இறுதி செய்துள்ளார். இதன்படி, வரும் 15ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பமாகும். 10 நாட்கள் கூட்டத்தொடர் நடந்து, வரும் 26ம் தேதி முடியும். எனவே இந்த நாட்களில் கூட்டத்தொடர் நடத்த அழைப்பு விடுக்கும்படி, கவர்னருக்கு, அரசு தரப்பில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசின் அவல நிலை குறித்து தோல் உரிப்பதற்கு எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., தயாராக உள்ளன. அரசின் தோல்விகளை குறிப்பிட்டு, திணறடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.