sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காலை 8:30 மணிக்கே பால், தயிர், மோர் காலி வினியோகிக்க முடியாமல் கே.எம்.எப்., தவிப்பு

/

காலை 8:30 மணிக்கே பால், தயிர், மோர் காலி வினியோகிக்க முடியாமல் கே.எம்.எப்., தவிப்பு

காலை 8:30 மணிக்கே பால், தயிர், மோர் காலி வினியோகிக்க முடியாமல் கே.எம்.எப்., தவிப்பு

காலை 8:30 மணிக்கே பால், தயிர், மோர் காலி வினியோகிக்க முடியாமல் கே.எம்.எப்., தவிப்பு


ADDED : மே 07, 2024 11:16 PM

Google News

ADDED : மே 07, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் உள்ள முக்கிய நகரங்களில், காலை 8:30 மணிக்குள் அனைத்து நந்தினி கடைகளிலும் பால், தயிர், மோர் காலியாகி விடுகின்றன. தேவை அதிகமாக இருப்பதால், சப்ளை செய்ய முடியாமல் கே.எம்.எப்., தவித்து வருகிறது.

கர்நாடகாவில் கே.எம்.எப்., எனப்படும் கர்நாடகா பால் கூட்டமைப்பின் கீழ், 15 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் உள்ளன. தினமும் 82 லட்சம் லிட்டர் பால் சேகரிக்கப்படுகிறது. இதில், 52 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாகவும்; 12.50 லட்சம் லிட்டர் தயிர் பாக்கெட்டுகளாகவும் 1.50 லட்சம் லிட்டர் மோர் பாக்கெட்டுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை 40 - 45 லட்சம் லிட்டர் பால் மட்டுமே விற்பனையாகி வந்தது. தற்போது 52 லட்சம் லிட்டர் விற்பனையாவது கர்நாடகா வரலாற்றில் இதுவே முதன் முறை.

தற்போது கர்நாடகாவில் வாட்டி வதைக்கும் வெயிலால் பொது மக்கள் அல்லல்படுகின்றனர். பலரும் பனை நுங்கு, இளநீர், ஜூஸ் சென்டர்களை நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர். இத்துடன், பால், தயிர், மோர் வாங்குவோரும் அதிகரித்துள்ளனர். தினமும் வழக்கத்தை விட, பலரும் தயிர், மோர் வாங்கி செல்கின்றனர். இதனால் கே.எம்.எப்., கடைகளில் காலை 8:30 மணிக்குள் அனைத்தும் முடிந்து விடுகின்றன.

அதே வேளையில், கே.எம்.எப்., கடைகளில் பால் வைத்திருப்பது சவாலாக உள்ளது. கடும் வெயிலால் பால் சீக்கிரமே கெட்டு விடுகிறது. காலை, மாலை என இரு வேளைகளிலும், குறைந்த அளவிலேயே கடை உரிமையாளர்கள் பால் வாங்குகின்றனர்.

கே.எம்.எப்., இயக்குனர் மடிஹள்ளி பிரகாஷ் கூறுகையில், ''கர்நாடகாவில் பால், தயிர், மோர் தேவை அதிகரித்து உள்ளது. பால் சங்கங்களில் பால் இருப்பு அதிகரித்து வந்தாலும், சந்தையில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் சந்தை தேவைக்கு ஏற்ப பால், தயிர், மோர் வினியோகம் செய்வது சவாலாக உள்ளது. தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us