ADDED : பிப் 22, 2025 09:33 PM
கரவால்நகர்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு வந்த அரசு பள்ளி மாணவர்களை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கியது.
துக்மீர்பூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 20ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவிட்டு, பிற்பகலில் மாணவர்கள் வெளியே வந்தனர்.
வீட்டுக்குச் செல்லும் வழியில், பள்ளியின் பின்புறம் மூன்று மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களை ஒரு கும்பல் வழிமறித்துத் தாக்கியது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடியது. காயமடைந்த மாணவர்கள் மூன்று பேரையும் போலீசார் மீட்டு, ஜே.பி.சி., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவர்களை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.