ADDED : ஜூன் 04, 2024 04:07 AM
ஷிவமொகா : ஷிவமொகாவின், காடி கொப்பத தாண்டாவில் வசிப்பவர் மல்லேஷ், 45. இவர் நேற்று காலை மது அருந்திவிட்டு, திப்புநகரில் உள்ள கறிக்கடைக்கு வந்தார். கடையில் இருந்த 16 வயது சிறுவனிடம், எடை போட்டு கறி வாங்கினார்.
அப்போது மல்லேஷ், சில துண்டுகள் அதிகமாக போடும்படி கேட்டு, தகராறு செய்தார். சிறுவன், 'அதிகமான கறி துண்டுகள் போட முடியாது' என்றான். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. பொறுமையிழந்த சிறுவன், கறி வெட்டும் கத்தியால், மல்லேஷின் மண்டையில் தாக்கினார்.
ரத்த காயங்களுடன் மயங்கிய இவரை, அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தொட்டபேட் போலீசார், சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஒரு துண்டு கறியை அதிகமாக கேட்ட வாடிக்கையாளரை, கறி வெட்டும் கத்தியால் தாக்கிய சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.