'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பிய வாலிபர் மீது தாக்கு
'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பிய வாலிபர் மீது தாக்கு
ADDED : ஏப் 25, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொப்பால், : கொப்பால் கங்காவதி டவுன் ஸ்ரீராம்நகரை சேர்ந்தவர் குமார் ரத்தோட், 29. நேற்று முன்தினம் இரவு பாரில் மது அருந்தினார். மது அருந்துவதற்கு முன்பு, 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிட்டார். இதற்கு அங்கு மது அருந்திக் கொண்டிருந்த பைரோஸ் கான், 30 என்பவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதனால் அவருக்கும், பைரோஸ் கானுக்கும் தகராறு ஏற்பட்டது. அவர்களை பார் ஊழியர்கள் சமாதானம் செய்தனர். பின்னர் அங்கிருந்து பைரோஸ் கான் சென்றார்.
மது குடித்துவிட்டு குமார் ரத்தோட் வெளியே வந்ததும், பைரோஸ் கான் உட்பட 20 பேர் சேர்ந்து, குமார் ரத்தோடை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்தவரை, பார் ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

