அகண்ட சீனிவாசமூர்த்தியை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி
அகண்ட சீனிவாசமூர்த்தியை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி
ADDED : ஏப் 09, 2024 06:20 AM

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாசமூர்த்தியை, பா.ஜ.,வுக்கு இழுக்கும் முயற்சி நடக்கிறது.
பெங்களூரு புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாசமூர்த்தி. 2020ல் கே.ஜி., ஹள்ளி, டி.ஜே., ஹள்ளியில் நடந்த கலவரத்தில், காவல் பைரசந்திராவில் உள்ள அவரது வீட்டிற்கு, தீ வைக்கப்பட்டது.
மாநகராட்சி காங்கிரஸ் முன்னாள் மேயர் சம்பத்ராஜ் மீது அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்காததால், அகண்ட சீனிவாசமூர்த்தி அதிருப்தி அடைந்தார்.
காங்கிரசில் இருந்து விலகினார். கடந்த சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், புலிகேசிநகரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
லோக்சபா தேர்தலில், பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளரான மத்திய விவசாய இணை அமைச்சர் ஷோபா, அகண்ட சீனிவாசமூர்த்தி வீட்டிற்குச் சென்று, அவரை சந்தித்து ஆதரவு கேட்டார். பின்னர் பா.ஜ.,வில் இணையும்படி அழைப்பு விடுத்தார்.
பா.ஜ.,வில் இணைந்தால், அவரை பயன்படுத்தி, தலித் சமூக ஓட்டுகளைப் பெறலாம் என, பா.ஜ., கணக்கு போடுகிறது.

