மாஜிஸ்திரேட் முன்னிலையில் வக்கீல் மீது தாக்குதல் முயற்சி
மாஜிஸ்திரேட் முன்னிலையில் வக்கீல் மீது தாக்குதல் முயற்சி
ADDED : ஏப் 26, 2024 01:48 AM
புதுடில்லி:நீதிமன்றத்திற்குள் எதிர்த்தரப்பு வக்கீலை அடிக்க முயன்ற வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பார் கவுன்சிலை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை பெருநகர மாஜிஸ்திரேட் ரேணு விசாரித்துக்கொண்டிருந்தார்.அப்போது எதிர்த்தரப்பு வழக்கறிஞரை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவு:
கடந்த 22ம் தேதி மனுதாரர் சார்பில் ஆஜரான அனுஜ் அகர்வால், எதிர்த்தரப்பு சார்பில் ஆஜரான வைபவ் நிஜாவா வாதிடும்போது தேவையில்லாமல் தலையிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
திடீரென வைபவ் நிஜாவாவின் இணை ஆலோசகர் திவ்யா திரிபாதி, சிம்ரன் ஆகியோரை தள்ளிவிட்டு, அவரை அனுஜ் அகர்வால் தாக்க முயன்றார்.
சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவின் நகலை ரோகினி கோர்ட் பார் அசோசியேஷன் மற்றும் பார் கவுன்சிலுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.

