ADDED : ஏப் 13, 2024 05:50 AM

மைகோ லே - அவுட்,
கன்னட நடிகர் ஸ்கந்த அசோக்கின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள், அவரது ரசிகர்களிடம் பணம் கேட்டு, குறுந்தகவல் அனுப்பி உள்ளனர்.
கன்னட திரையுலகில் இளம் நடிகராக இருப்பவர் ஸ்கந்த அசோக், 37. தமிழில் சாருலதா, அங்குசம், முப்பரிமாணம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார். கன்னடத்தில் நிறைய படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
இவர், பெங்களூரு மைகோ லே - அவுட்டில் வசிக்கிறார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார். ரசிகர்கள் அவரை பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் ஸ்கந்த அசோக்கின் இன்ஸ்டாகிராம் கணக்கை, மர்ம நபர்கள் முடக்கினர். அவர் பேசுவது போன்று, ரசிகர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளனர்.
அதில், அவசரமாக பணம் தேவைப்படுகிறது. பணம் கொடுத்து உதவினால், கூடிய விரைவில் தருவதாக கூறி உள்ளனர். இதுபற்றி ஸ்கந்த அசோக்கின் கவனத்திற்கு சென்றது.
அவரது உதவியாளர் மைகோ லே - அவுட் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.

