மக்களே உஷார் : சந்தைக்கு போனா பூண்டு உண்மையான்னு பார்த்து வாங்குங்க
மக்களே உஷார் : சந்தைக்கு போனா பூண்டு உண்மையான்னு பார்த்து வாங்குங்க
ADDED : ஆக 18, 2024 07:13 PM

மும்பை: மகா.,மாநிலத்தில் சிமெண்டால் ஆன பூண்டு சந்தையில் விற்பனைக்காக புழங்க விட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
பூண்டு இந்தியர்களின் சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று.இதன் விலை அவ்வப்போது ராக்கெட் உயரத்திற்கு அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இருப்பினும் நம் இல்லத்தரசிகள் பூண்டு பயன்படுத்துவதை குறைப்பதில்லை.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ள மர்ம நபர்கள் சிலர் சிமெண்டால் பூண்டு-வை போன்று செயற்கையாக உருவாக்கி அதனை சந்தையில் புழங்க விட்டு உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் சிமெண்டால் செய்யப்பட்ட போலி பூண்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி உள்ளது.
மாநிலத்தின் காவல் துறையில் பணி புரிந்துஓய்வு பெற்றவர் சுபாஷ் பாட்டீல் இவரது மனைவி தெருவோர வி்யாபாரி ஒருவரிடம் பூண்டு வாங்கி உள்ளார். அந்த பூண்டில் சிமெண்டில்இருந்து தயாரிக்கப்பட்டு உண்மையான பூண்டு போல இருந்துள்ளது.
அதில் பூண்டை உரிக்கும்போது அதன் உள்ளே சிமெண்டுடன் தெரிகிறது.
நாடு முழுவதும் பூண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், காய்கறி சந்தைகளில் போலி பூண்டு விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

