உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 21, 2024 06:34 AM
அ நிறம் | அளவு
சாம்ராஜ் நகர்: புலி தாக்கியதில், குட்டி யானை உயிரிழந்தது. அதனருகில் தாய் யானை பரிதவித்தபடி நின்றிருந்தது.
சாம்ராஜ் நகர், குண்டுலுபேட்டின், பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தில், நான்கு நாட்களுக்கு முன், ஒரு புலி, நான்கு மாத குட்டி யானையை தாக்கியது. பலத்த காயமடைந்து தாயுடன் நடமாடிய குட்டி யானை, பண்டிப்பூரின், கெக்கனஹள்ளி சோதனைச்சாவடிக்கு, 3 கி.மீ., தொலைவில் ஊட்டி சாலையில் நேற்று மதியம் இறந்தது.
குட்டி யானை அருகிலேயே, தாய் யானை துயரத்தில் பிளறியபடி நின்றது. அருகில் யாரையும் நெருங்க விடவில்லை. நெடுஞ்சாலை அருகிலேயே குட்டி யானையின் உடல் கிடப்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், குட்டி யானையின் உடலை ஓரமாக நகர்த்தி, வாகன போக்குவரத்துக்கு வழிவகுத்தனர்.
