ADDED : ஏப் 02, 2024 03:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கைதான ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று (ஏப்ரல் 02) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது எந்தவித ஆதாரமும் இன்றி 6 மாதங்களாக சிறையில் அடைப்பதா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த உத்தரவை வேறு வழக்குக்கு முன் உதாரணமாக கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

