ADDED : ஆக 16, 2024 10:27 PM
இந்தியா கேட்:பார்லிமென்ட் மற்றும் மத்திய டில்லியின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்கள், கோல்கட்டாவில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டங்கள், டில்லியில் பயிற்சி மையத்தில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மூன்று பயிற்சி மாணவர்கள் உயிரிழந்ததை கண்டித்து போராட்டம் என, நகர் முழுவதும் போராட்டக்குரல்கள் ஒலிக்கின்றன.
வங்கதேசத்தின் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் அங்கு தாக்கப்படுவதைக் கண்டித்து நேற்று பெண்கள் அமைப்பு பேரணி, போராட்டங்களை நடத்தியது. இதுபோன்ற பல்வேறு போராட்டங்களுக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், மத்திய டில்லியின் பிற பகுதிகளுக்கு அருகில் டில்லி காவல் துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

