பெங்களூரு கிழக்கு டி.சி.பி., குல்தீப்குமார் ஜெயின்
பெங்களூரு கிழக்கு டி.சி.பி., குல்தீப்குமார் ஜெயின்
ADDED : மார் 22, 2024 05:48 AM

பெங்களூரு: கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7ம் தேதிகளில், இரண்டு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக மாநிலத்தின் தலைநகரான, பெங்களூரில் உள்ள மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில் பெங்களூரு கிழக்கு மண்டல போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் குல்தீப்குமார் ஜெயினை, கிழக்கு மண்டல டி.சி.பி.,யாக நியமித்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.
அந்த பதவியில் இருந்த தேவராஜ், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். குல்தீப்குமார் ஜெயின், மங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த போது, போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுத்தார். நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர்.
பெங்களூரு கிழக்கு மண்டல போலீஸ் நிலையங்கள், பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதியின் கீழ் வருகிறது. அந்த தொகுதியில் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க, குல்தீப்குமார் ஜெயினை டி.சி.பி.,யாக அரசு நியமித்து உள்ளது.

