ADDED : மார் 12, 2025 11:20 PM
காடுகோடி: பெங்களூரு, தொட்டபனஹள்ளியில் வங்கதேசத்தை சேர்ந்தவர் சட்டவிரோதமாக வசிப்பதாக, காடுகோடி போலீசாருக்கு சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. அந்த நபரின் நடவடிக்கையை, போலீசார் கண்காணித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் முகமது சித்திக், 55, என்பதும், 2006ம் ஆண்டில் மேற்குவங்க மாநிலம் வழியாக நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததும் தெரிந்தது. கோல்கட்டா, மால்டா பகுதிகளில் பல ஆண்டுகள் வசித்துள்ளார். பின், அங்கிருந்து பெங்களூரு வந்து இங்கு வசித்ததும் தெரிந்தது.
மால்டாவில் வசித்தபோது, போலி முகவரியை கொடுத்து ஆதார், வாக்காளர், பான் அட்டையை பெற்றதும் தெரிந்தது. மேலும் தன்னை போல வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைபவர்களுக்கு, ஆதார், பான் அட்டையை வாங்கிக் கொடுத்தும் தெரியவந்தது. விசாரணை நடக்கிறது.