ADDED : மே 18, 2024 01:13 AM

அ நிறம் | அளவு
எம்.பி., ஸ்வாதி மாலிவாலை முதல்வரின் தனிச்செயலர் பிபவ் குமார் தாக்கியதை கண்டித்து, அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் அருகே டில்லி பா.ஜ., மகளிர் அணி உறுப்பினர்கள் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகளிர் அணி தலைவர் ரிச்சா பாண்டே மிஸ்ரா தலைமையில், வளையல் ஏந்திய போராட்டக்காரர்கள், கெஜ்ரிவாலை ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். தன்னுடைய அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த மோசமான சம்பவம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்காக, வளையல்களை முதல்வரிடம்ஒப்படைக்க விரும்புவதாக மிஸ்ரா கூறினார்.
