ADDED : பிப் 14, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சூர்: கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடி அருகே உள்ள போட்டா பகுதியில், பெடரல் வங்கி இயங்கி வருகிறது. இங்கு, ஹெல்மெட் அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் நேற்று மதியம் உள்ளே நுழைந்தார்.
அங்குள்ள காசாளர் அறைக்கு சென்ற அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி ஊழியர்களை மிரட்டினார்.
அதன்பின், காசாளர் அறையின் கண்ணாடியை உடைத்து, அங்கு வைத்திருந்த 15 லட்சம் ரூபாயை அவரது பைக்குள் எடுத்து போட்டு கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.