மூணாறில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்
மூணாறில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்
ADDED : மே 21, 2024 07:46 AM

மூணாறு : மூணாறில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
மூணாறில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர் உள்பட பல்வேறு பொருட்கள் விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவை தாராளமாக பயன்படுத்துவதால் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகின்றன. ஊராட்சி சார்பில் நகரில் மட்டும் குப்பை தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது.
பிற பகுதிகளில் ரோட்டோரங்களிலும், எஸ்டேட் பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
அதனை உறுதிபடுத்தும் வகையில் இரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் முதிரைபுழை ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் அளவில் குவிந்தன. அவற்றை ஊராட்சி ஊழியர்கள் அகற்றினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

