ADDED : ஜூலை 07, 2024 03:19 AM

சாம்ராஜ்நகர்: குண்டுலுபேட்டில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்றவர்களை, தேனீக்கள் கொட்டியதில், 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட்டின் பசவபுரா கிராமத்தைச் சேர்ந்த முதியவர், நேற்று முன்தினம் இறந்தார். அவருக்கு நேற்று காலை இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடந்தது.
அப்போது உறவினர்களும், கிராமத்தினரும் இருந்தனர். முதியவரின் உடல் தகனம் செய்தபோது, அதில் இருந்து எழுந்த புகையால், அருகில் மரத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்து தேனீக்கள் கலைந்தன.
இதைப் பார்த்த அங்கிருந்தவர், அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனாலும், தேனீக்கள் பலரின் முகம், கை, கால், உடல்களில் கொட்டியது.
காயமடைந்த 42 பேர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினர். இதில் சிலருக்கு வலி அதிகமாக இருந்ததால், மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த தாலுகா சுகாதார அதிகாரி டாக்டர் அலீம் பாஷா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் நலம்விசாரித்தார்.
7_DMR_0016
தேனீக்கள் கொட்டியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, தாலுகா சுகாதார அதிகாரி ஆலிம் பாஷா சந்தித்து ஆறுதல் கூறினார். இடம்: சாம்ராஜ்நகர்.