பெங்., மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு டெங்கு காய்ச்சல்
பெங்., மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு டெங்கு காய்ச்சல்
ADDED : ஜூன் 25, 2024 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்துக்கு, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
கர்நாடகா முழுதும் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, டெங்கு பரவுகிறது.
நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் 22 வரை 5,187 பேருக்கு டெங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
பெங்களூரிலும் ஆறு மாதங்களில் 1,230 பேர் பாதிப்படைந்தனர். பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்துக்கு, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுஉள்ளது.
நான்கைந்து நாட்களாக விடுமுறையில் உள்ள அவர், வீட்டிலேயே சிகிச்சை பெறுகிறார். தற்போது குணமடைந்து வருகிறார்.
பெங்களூரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி சுகாதரப் பிரிவு அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.