sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்., மாநகராட்சி, குடிநீர் வாரியம் உலக வங்கியில் கடன் வாங்க திட்டம்

/

பெங்., மாநகராட்சி, குடிநீர் வாரியம் உலக வங்கியில் கடன் வாங்க திட்டம்

பெங்., மாநகராட்சி, குடிநீர் வாரியம் உலக வங்கியில் கடன் வாங்க திட்டம்

பெங்., மாநகராட்சி, குடிநீர் வாரியம் உலக வங்கியில் கடன் வாங்க திட்டம்


ADDED : ஜூன் 30, 2024 10:30 PM

Google News

ADDED : ஜூன் 30, 2024 10:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு ; பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறும் பெங்களூரு மாநகராட்சி, தற்போது உலக வங்கியிடம் உதவி பெற காத்திருக்கிறது. பொருளாதார ஒழுங்கு இல்லாததே, சூழ்நிலைக்கு காரணம் என, நகர வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெங்களூரு மாநகராட்சி, இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடி பிரச்னையில் தத்தளிக்கிறது. வளர்ச்சி பணிகளுக்கு, ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை வழங்க பணம் இல்லாமல் பரிதவிக்கிறது. அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறிய உதாரணங்களும் உள்ளன.

பட்ஜெட் தாக்கல்


இத்தனைக்கு பின்னரும், பொருளாதார ஒழுங்கை பின்பற்றாதது, வருவாய்க்கும் அதிகமாக செலவிடுவது, வருவாயை அதிகரிப்பதில் அக்கறை காண்பிக்காதது, வருவாயை மனதில் கொள்ளாமல், மனம் போனபடி அதிக தொகைக்கு பட்ஜெட் தாக்கல் செய்வது போன்ற குளறுபடிகளை செய்கிறது.

ஆண்டு தோறும் அதிக வருவாய் எதிர்பார்த்து, பட்ஜெட் தாக்கல் செய்கிறது. அதன்பின் வருவாய் போதாமல், அரசிடம் கையேந்துவதை மாநகராட்சி வழக்கமாக வைத்துள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க, வளர்ச்சி திட்டங்களுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குகிறது. இதற்காக தன் சொத்துகளை அடமானம் வைத்துள்ளது.

கடந்த 2014ல், பெங்களூரின் கே.ஆர்.மார்க்கெட், டவுன் ஹால் கட்டடத்தை லண்டனின், பிரபலமான வங்கிகளில் அடமானம் வைத்து, 2,500 கோடி ரூபாய் கடன் பெற்றது. இப்போதும் அதே வழி முறையை கையாள்கிறது. தன் வருவாயை அதிகரித்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு பதில், கடன் வாங்கி பணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

பா.ஜ., அரசு இருந்த போது, பெங்களூரு மாநகராட்சிக்கு ஓரளவு நிதியுதவி கிடைத்தது. காங்கிரஸ் அரசு வந்த பின், பெங்களூரு மாநகராட்சி, குடிநீர் வாரியம் உட்பட, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிர்பார்த்த அளவில் நிதியுதவி கிடைக்கவில்லை.

மாநகராட்சி தன் எல்லைக்குள், வருவாயை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. சொத்து வரி பாக்கி வைத்துள்ளோரிடம் வசூலிக்கலாம். மார்க்கெட் கட்டடங்கள், வர்த்தக கட்டடங்கள், கடைகளை மிகவும் குறைந்த வாடகைக்கு கொடுத்துள்ளது. வாடகை உயர்த்தினால் மாதந்தோறும் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

சட்டவிரோதம்


சாலைகளில் குப்பை கொட்டுவோரிடம், அபராதம் வசூலிக்கிறது. இதை சரியாக செய்தாலே வருவாய் கொட்டும். நகரும் அழகாகும். நகரில் சட்டவிரோதமாக விளம்பரங்கள் பொருத்துகின்றனர். இதை அடையாளம் கண்டு, வரியை வசூலித்தால் வருவாய் கிடைக்கும். அரசுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு, வருவாய் கிடைக்கும். ஆனால் அதிகாரிகள், அதை செய்வதில் ஆர்வம் காண்பிக்காமல், மாநகராட்சியை கடன் சுழலில் தள்ளுகின்றனர்.

சாலை மேம்பாட்டு பணிகள், அடிப்படை வசதிகள் உட்பட, வளர்ச்சி திட்டங்களுக்கு உலக வங்கியிடம் 2,000 கோடி ரூபாய் கடன் பெற, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக எத்தனை சொத்துகளை அடமானம் வைக்குமோ தெரியவில்லை.

மாநகராட்சியை போன்று, பெங்களூரு குடிநீர் வாரியமும், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மாநகராட்சிக்கு பல வழிகளில் வருவாய் கிடைக்கிறது. ஆனால் குடிநீர் வாரியத்துக்கு குடிநீர் வினியோகிப்பதால் கிடைக்கும் கட்டணத்தை தவிர, வேறு எந்த வருவாயும் இல்லை. ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

ஆனால், பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணத்தை உயர்த்தவில்லை. மக்களும் குடிநீர் கட்டணத்தை சரியாக செலுத்துவது இல்லை. நிதி பற்றாக்குறையால், காவிரி ஐந்தாம் கட்ட திட்ட பணிகள் தாமதமாகிறது. இம்முறை வறட்சி ஏற்பட்டதால், குடிநீர் வாரியத்துக்கு செலவு அதிகரித்தது.

அரசின் உதவியும் கிடைக்கவில்லை. எனவே உலக வங்கியிடம் 1,000 கோடி ரூபாய் கடன் பெற, குடிநீர் வாரியம் தயாராகிறது. இதற்காக அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. குடிநீர் கட்டணத்தை உயர்த்தும்படி மன்றாடுகிறது.

பொருளாதார வல்லுனர்கள் கூறியதாவது:

பெங்களூரு மாநகராட்சி மனம் வைத்தால், ஆண்டுதோறும் 8,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் சேகரிக்கலாம். ஆனால் 4,000 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது. பாதிக்கு பாதி வருவாய் சேகரிப்பதில் குளறுபடி செய்கிறது.

ஆவணங்கள்


ஆண்டுக்கு ஆண்டு, மாநகராட்சியின் செலவு அதிகரிக்கிறது. வருவாய் அதிகரிக்கவில்லை. அரசின் பட்ஜெட்டிலும் எதிர்பார்த்த நிதியுதவி கிடைப்பது இல்லை. எனவே மாநகராட்சி பொருளாதார நெருக்கடியில் சிக்குகிறது. உலக வங்கியில் கடன் பெற முடிவு செய்துள்ளது. கடன் கொடுத்த சில சொத்துகளின் ஆவணங்களை, உலக வங்கி கேட்டுள்ளது. விரைவில் ஆவணங்களை தாக்கல் செய்யும்.

மாநகராட்சிக்கு இத்தகைய அவலநிலை ஏற்பட, அதிகாரிகளின் பொறுப்பின்மையே காரணம். நகரின் மிகப்பெரிய மார்க்கெட்டான, மஹாராஜாவின் பெயரில் உள்ள கே.ஆர்.மார்க்கெட், இப்போதும் லண்டனின் வங்கி ஒன்றில் அடமானத்தில் இருப்பது, வருத்தத்துக்குரிய விஷயமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us