ADDED : ஏப் 16, 2024 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கபல்லாபூர் : ''துணை முதல்வர் சிவகுமார், கனகபுரா பாறை என்றால் நான் நந்திமலை,'' என பா.ஜ., வேட்பாளர் சுதாகர் தெரிவித்தார்.
சிக்கபல்லாபூரில், நேற்று அவர் கூறியதாவது:
கனகபுரா பாறையுடன் மோதி, சிக்கபல்லாபூருக்கு மருத்துவ கல்லுாரி கொண்டு வந்தேன். பால் கூட்டுறவு சங்கம் கொண்டு வந்தேன். ஆனால் பால் கூட்டுறவு சங்கத்தை, காங்கிரசார் ரத்து செய்தனர். நான் எம்.பி.,யானால் சிக்கபல்லாபூருக்கு, பால் கூட்டுறவு சங்கம் கொண்டு வருவேன். துணை முதல்வர் கனகபுரா பாறை என்றால், நான் சிக்கபல்லாபூர் நந்திமலை.
பெண்களை பற்றி குமாரசாமி எதையோ கூறிவிட்டார் என, அவரை சாடுகின்றனர். இவர் முதல்வராக இருந்த போது, பெண்களின் நலனை மனதில் கொண்டு, சாராயத்தை தடை செய்தார். அவருடன் என்னையும், லோக்சபாவுக்கு அனுப்ப கடவுள் முடிவு செய்துள்ளார்.
இவ்வாறு அவர்கூறினார்.

