ADDED : ஆக 30, 2024 09:55 PM

பெங்களூரு: தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூவிதா, மாநில தலைமை செயலரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் கரூரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூவிதா, சாம்ராஜ்நகர் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக இருந்தார்.
பேறுகால விடுப்பில் சொந்த ஊருக்கு சென்றதால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது விடுமுறை முடிந்து விட்டது.
இந்நிலையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பூவிதா, மாநில தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷின், சிறப்பு அதிகாரியாக நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டார். உடனடியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இவர், 2016ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., குழுவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை செயலரின் சிறப்பு அதிகாரி பொறுப்பு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு என்னென்ன பணிகள் என்பது அறிவிக்கப்படவில்லை.